மாணவர்கள் மத்தியில் கலாச்சாரத்தையும் மத நல்லிணக்கத்தையும் வளர்க்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் , ரம்ஜான் , கிறிஸ்துமஸ் பண்டிகைகள் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.மேலும் நடனக்கலை மற்றும் நாடகக் காலையில் மாணவர்கள் தங்கள் திறமையை வெளிக்கொணர்வதற்கு பல போட்டிகள்கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
55வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு 2022-23 கல்வியாண்டில் பெரம்பலூர் மாவட்ட அளவிலான நடைபெற்ற கட்டுரை போட்டி மற்றும் பேச்சு போட்டியில் மூன்றாம் இடம் மற்றும் இரண்டாம் இடம் பெற்று பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினரிடம் பரிசு பெரும் 10ஆம் வகுப்பு மாணவன் S.பூபதி மற்றும் 12ஆம் வகுப்பு மாணவன் M.மணிரத்தினம்
2022-23 ஆம் கல்வியாண்டில் பேரறிஞர் அண்ணா மற்றும் அண்ணல் காந்தியடிகள் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சு போட்டியில் இரண்டாமிடம் மற்றும் மூன்றாமிடம் பெற்று மாவட்ட ஆட்சியரிடம் பரிசு பெரும் எம் பள்ளி மாணவர்கள் M.மணிரத்தினம் மற்றும் K. முகுந்தன்.
2022-2023 பெரம்பலூர் மாவட்ட அளவில் நடைபெற்ற தடகள விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்று பள்ளிக்கு பெருமைசேர்த்த மாணவர்களுடன் எங்கள் மேலான்தலைவர் அவர்கள்.
2022-2023 பெரம்பலூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கையுந்துவிளையாட்டுப் போட்டிகளில் முதலிடம்பெற்று பள்ளிக்குபெருமை சேர்த்தமாணவர்களை பாராட்டும் எங்கள் மேலான்தலைவர் அவர்கள்.
பள்ளியில் இயங்கி வரும் பல்வேறு கழகங்கள் மாணவர்களை ஊக்கப்படுத்தி தனித்திறன் ஆற்றலில் வளர்ச்சியுறவும், பொறுப்புள்ள மாணவனாக வளரவும் உதவி வருகின்றன.
நாள் | இயக்கம்/கழகம் | பொறுப்பாளர் |
---|---|---|
திங்கள் | சாரண இயக்கம் | R. பாலசுப்ரமணியன் |
திங்கள் | சாரணியர் இயக்கம் | D. சுமதி |
செவ்வாய் | தேசிய பசுமை படை | P. நல்லுசாமி |
புதன் | இளைஞர் செஞ்சிலுவை சங்கம் | M. கருணாகரன் |
வியாழன் | நாட்டு நலப்பணித் திட்டம் | J. ஜான் ராபின்சன் |
வெள்ளி | சுற்றுச் சூழல் கழகம் | விஜய் A,M. ரத்தினசாமி |
திங்கள் | தமிழ்ச் சங்கம் | D.இரவிச்சித்தார்த்தன் |
திங்கள் | சமூக அறிவியல் கழகம் | S.ஜெசிந்தா |
செவ்வாய் | ஆங்கில கழகம் | T. சங்கீதா |
செவ்வாய் | சிகப்பு நாடா கழகம் | N. பாலசுப்ரமணியன் |
புதன் | கணித கழகம் | S.பரமசிவம் |
புதன் | நுகர்வோர் கழகம் | K.இராஜா |
வியாழன் | அறிவியல் கழகம் | V. சந்திரசேகரன் |
வெள்ளி | விளையாட்டு கழகம் | D.விஜயக்குமார் |
வெள்ளி | நூலகம் | P.இரவிச்சந்திரன் |