பெரம்பலூர் – 2025-26 கல்வி ஆண்டிற்கான மாநில அளவிலான டெக்வாண்டோ போட்டி மதுரையில் நடைபெற்றது. இதில் பெரம்பலூர் ரோவர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மோனிகா (10-ம் வகுப்பு) மற்றும் சர்விதா (11-ம் வகுப்பு) ஆகியோர் தங்கப் பதக்கங்களை வென்றனர்.
தங்கம் வென்ற இவ்விரு மாணவிகளும் தேசிய அளவிலான போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர். வெற்றி பெற்ற மாணவிகளைப் பள்ளி தலைமை ஆசிரியர் வி. சந்திரசேகரன் மற்றும் உதவி தலைமை ஆசிரியர்கள் பாராட்டினர்.