*தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர்-621212.*
*கலைத் திருவிழா போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம்- மாநில அளவில் பங்கேற்பாளர்*
பெரம்பலூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டியில் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் அபிதா என்ற மாணவி தனிநபர் கிராமிய நடன நிகழ்வில் பங்கேற்று,மாவட்ட அளவில் முதலிடம் பெற்று, நமது பள்ளிக்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். மேலும்,மாநில அளவில் நடைபெற உள்ள போட்டியிலும் இவர் பங்கு கொள்வது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட அளவில் பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவியை(அபிதா-IX:B) பள்ளியின் தலைமை ஆசிரியர் திருV. சந்திரசேகரன் அவர்கள் பாராட்டி,சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் பள்ளியின் உதவித்தலைமை ஆசிரியர்கள் திரு S. பரமசிவன்,திரு V.ரமேஷ் திருமதி B.நிர்மலா ஆகியோர் உடனிருந்தனர், நன்றி.
-தலைமை ஆசிரியர்,
தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர்-621212.
