இன்று 16/10/2025 வியாழக்கிழமை முதல் நமது பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலக்கூடிய மாணவ-மாணவிகளில் திறமையான மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்களை இனம் கண்டு, அவர்கள் கல்வி தொடர்வதற்கு உதவும் ஒரு மதிப்புமிக்க உதவித்தொகை திட்டமான *தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை(NMMS-National Means-Cum-Merit Scholarship)* பெறுவதற்கு தகுதியான 40 மாணவர்கள்(15B+25G)
கொண்ட ஒரு தனி *NMMS* வகுப்பு, பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு V. சந்திரசேகரன் அவர்கள் தலைமையில்,உதவி தலைமை ஆசிரியர்கள்
திருS.பரமசிவன்,திரு V. ரமேஷ்,திருமதிB. நிர்மலா ஆகியோரின் முன்னிலையில் தொடங்கப்பட்டது. இவ்வகுப்பில் இன்று முதல் பிப்ரவரி மாதம் வரை ஆசிரியர்களால் தொடர்ந்து சிறப்பு பயிற்சி வழங்கப்படும்.