மாவட்ட அளவில் டென்னிஸ் போட்டியில் முத்திரை: தந்தை ஹேன்ஸ் ரோவர் பள்ளி மாணவர்களுக்கு முதலிடம்!

*தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி,* *பெரம்பலூர்-621212.*
*மாவட்ட அளவில் டென்னிஸ் போட்டியில் சாதனை*
கடந்த 06/11/2025 அன்று பெரம்பலூர் மாவட்ட அளவிலான டென்னிஸ் போட்டிகள் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. போட்டியில் பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் முதலிடம் பிடித்து பள்ளிக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வருகின்ற 14 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவிற்கான டென்னிஸ் போட்டியில் K.S.சஸ்வின் என்பவர் ஒற்றையர் பிரிவில் முதலிடமும், K.S.சஸ்வின் மற்றும் B.ஹோசன் ஆகியோர் இரட்டையர் பிரிவில் முதலிடமும் பெற்று பள்ளிக்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
இவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு V.சந்திரசேகரன்,ஆங்கில வழிக்கல்வி முதல்வர் திருமதி பாரதி, உதவித் தலைமை ஆசிரியர்கள் திரு V.ரமேஷ் திருமதி B. நிர்மலா ஆகியோர் பாராட்டி,சான்றிதழ் வழங்கி சிறப்பித்தனர்.
முன்னதாக பேசிய பள்ளியின் தலைமை ஆசிரியர் தனது தலைமையுரையில், டென்னிஸ் போட்டியில் பங்கு கொண்டு,மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சியளித்த இருபால் விளையாட்டு ஆசிரியப் பெருமக்களையும் நிர்வாகத்தின் சார்பாக மனதார வாழ்த்தி சிறப்பித்தார்.
-தலைமைஆசிரியர்,
தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி,
பெரம்பலூர்-621212.