வன உயிரின வார விழா ஓவியப் போட்டியில் பள்ளி மாணவிக்கு மாவட்ட அளவில் முதலிடம்!

*தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி,* *பெரம்பலூர்-621212.*
தமிழ்நாடு வனத்துறை பெரம்பலூர் வனக்கோட்டம் சார்பாக வன உயிரின வார விழா 2025 (அக்டோபர் 2 முதல் 8 வரை) கொண்டாடப்பட்டது.
பெரம்பலூர் வனக்கோட்டத்தில் அக்டோபர் 2025 ஆம் ஆண்டு வன உயிரின வார விழாவை முன்னிட்டு,மாவட்ட அளவில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் நமது தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் எட்டாம் வகுப்பு-அ-பிரிவு மாணவி B.கனிஷ்கா ஸ்ரீ என்பவர் பங்கு கொண்டு, மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து, பள்ளிக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
வெற்றி பெற்ற மாணவி B.கனிஷ்கா ஸ்ரீ என்பவரை பாராட்டி, நமது பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மரியாதைக்குரிய திருமதி ந. மிருணாளினி இ.ஆ.ப அவர்களும், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு M.பிரபாகரன் அவர்களும் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி சிறப்பித்தார்கள்.
வெற்றி பெற்று, மாவட்டத்திற்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்த செல்விB. கனிஷ்கா ஸ்ரீ என்ற மாணவியை,பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு V.சந்திரசேகரன், உதவித் தலைமை ஆசிரியர்கள் திருS.பரமசிவன்,திரு R.ரமேஷ்,திருமதி
B.நிர்மலா ஆகியோர் பாராட்டி,சிறப்பித்தனர்.
-தலைமைஆசிரியர்,
தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர்-621212.