தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர்-621212.*
*ரோவர் பள்ளி மாணவி தேசிய அளவில் சாதனை*
2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்காக (SGFI) நடத்தும் 69-ஆவது தேசிய அளவிலான 19 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான டேக்வாண்டோ போட்டிகள் ஜம்மு-காஷ்மீரில் கடந்த வாரம் 15/11/2025 முதல் 19/11/2025 வரை நடைபெற்றது.
இப்போட்டியில் நமது தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி S. கௌசல்யா XII D என்பவர் தேசிய அளவில் பங்கு கொண்டு,தேசிய அளவில் இரண்டாமிடம் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும்,ரூபாய் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் (1,50,000/-) ரொக்க பரிசையும் பெற்று நமது பள்ளிக்கும், மாவட்டத்திற்கும், மாநிலத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
தேசிய அளவில் சாதனை புரிந்த மாணவியை,தந்தை ரோவர் கல்வி குழுமத்தின் மரியாதைக்குரிய துணை மேலாண் தலைவர் திரு V.ஜான் அசோக் குமார் M.A.,B.L., அவர்கள் பாராட்டி சிறப்பித்தார். இந்நிகழ்வில் இயக்குனர் R. சக்தீஸ்வரன்,தலைமை ஆசிரியர் V. சந்திரசேகரன், உதவித் தலைமை ஆசிரியர்கள் திரு S.பரமசிவன், திருமதி B.நிர்மலா மற்றும் உடற்கல்வி ஆசிரியர் திரு D. விஜயகுமார் மற்றும் மாவட்ட பயிற்றுநர் ஆகியோர் உடனிருந்தனர்.
-தலைமைஆசிரியர்,
தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி,
பெரம்பலூர்-621212.