ரோவர் பள்ளி மாணவி கலைத் திருவிழா போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம்

கலைத் திருவிழா போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி மாணவியை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சந்திரசேகரன் பாராட்டி வாழ்த்தினார்.

பெரம்பலூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டியில் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் அபிதா என்ற மாணவி தனிநபர் கிராமிய நடன நிகழ்வில் பங்கேற்று, மாவட்ட அளவில் முதலிடம் பெற்று, நமது பள்ளிக்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். மேலும், மாநில அளவில் நடைபெற உள்ள போட்டியிலும் இவர் பங்கு கொள்வது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட அளவில் பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவியை (அபிதா - IX:B) பள்ளியின் தலைமை ஆசிரியர் சந்திரசேகரன் பாராட்டி, சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வில் பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர்கள் பரமசிவன், ரமேஷ், நிர்மலா ஆகியோர் கலந்து கொண்டனர்.