ரோவர் பள்ளி உணவுத் திருவிழாவில் பாரதியார் பாணியில் கவிதை பாடி அசத்திய மாணவி!

தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பாரம்பரிய உணவுத் திருவிழாவில், பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு மாணவி ஒருவரின் கவிதை முழக்கம் அனைவரையும் கவர்ந்தது.

"அன்னம் என்றோர் அமுதம் அய்யா!" எனத் தொடங்கி, கம்பு, சோளம், கேழ்வரகு ஆகியவற்றின் நன்மைகளையும், "எங்கள் உணவு சுவை அல்லடி, உள்ளம் காக்கும் ஓர் வைத்தியம்" என உணவே மருந்து என்ற தத்துவத்தையும் பாரதியார் பாணியிலேயே அந்த மாணவி பாடி அசத்தினார்.

தலைமையாசிரியர் திரு. V.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், மாணவிகள் தயாரித்த சத்தான உணவுகளுடன், இந்த வீரமிக்க கவிதை முழக்கமும் சேர்ந்து பாரதியார் பிறந்தநாள் விழாவிற்கு கூடுதல் பெருமை சேர்த்தது.