ரோவர் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லாப் பாடப்புத்தகங்கள் வழங்கீடு

பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளியில் இன்று (05/01/2026) திங்கட்கிழமை காலை நடைபெற்ற இறை வழிபாட்டுக் கூட்டத்தில், மாணவ-மாணவியருக்குத் தமிழக அரசின் விலையில்லாப் பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் வழங்கப்பட்டன.நிகழ்வின் விபரங்கள்:தலைமை: பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. V. சந்திரசேகரன் அவர்கள் தலைமை தாங்கி புத்தகங்களை வழங்கினார்.பயனாளிகள்: 2025-2026 ஆம் கல்வி ஆண்டின் மூன்றாம் பருவத்திற்குரிய 6 மற்றும் 7-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசப் பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுகளும், 8 மற்றும் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச நோட்டுகளும் வழங்கப்பட்டன.முன்னிலை: இந்நிகழ்வில் உதவித் தலைமை ஆசிரியர்கள் திரு. S. பரமசிவன், திரு. V. ரமேஷ், திருமதி. B. நிர்மலா மற்றும் ஒருங்கிணைப்பாளர் திரு. N. பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்து சிறப்பித்தனர்.