மாவட்ட கலைத் திருவிழாவில் ரோவர் மாணவிகளின் கலை அற்புதம்!

*தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர்-621212.*
மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் பங்கேற்பு
தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகள், பெரம்பலூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டிகளான தனி நபர் நடனம் மற்றும் குழு நடன போட்டிகளில் பங்கு கொண்டு, மாவட்டத்திற்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.கலைத் திருவிழா போட்டிகளில் பங்கு கொண்டு பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவிகளுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் திருV.சந்திரசேகரன் அவர்கள் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வில் பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியை திருமதி B. நிர்மலா மற்றும் பட்டதாரி ஆசிரியை திருமதி P. கவிதா ஆகியோர் உடனிருந்தனர்.நன்றி.
-தலைமைஆசிரியர்,
தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி,* *பெரம்பலூர்-621212.