பள்ளிக்கல்வித்துறையின் வழிகாட்டுதலின்படி, பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளியில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த நாள் விழா (11/12/2025) மிக எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. V. சந்திரசேகரன் அவர்களின் தலைமையில் இந்த விழா நடைபெற்றது. உதவித் தலைமை ஆசிரியர்கள் திரு. S. பரமசிவன், திரு. V. ரமேஷ் மற்றும் திருமதி. B. நிர்மலா ஆகியோர் முன்னிலை வகித்து நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர்.