கடந்த வாரம் நமது பெரம்பலூர் மாவட்ட அளவிலான கூடைப்பந்து மற்றும் கையுந்துபந்து போட்டிகள் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. அப்போட்டிகளில் நமது பள்ளி மாணவ-மாணவிகள் கூடைப்பந்து போட்டியில் Under-14 பெண்கள் பிரிவில் இரண்டாமிடமும், Under-17 பெண்கள் பிரிவில் மூன்றாமிடமும், கையுந்துபந்து போட்டியில் Under-17 ஆண்கள் பிரிவில் மூன்றாமிடத்தையும், மிதிவண்டி போட்டியில் Under-17 பெண்கள் பிரிவில் G.D.ஓவியா-11D முதலிடத்தையும், Under-14 பிரிவில் ஆர் R.ஜஸ்விதா-7A முதலிடத்தையும்,
K.இலக்கியா-7A மூன்றாமிடத்தையும் பெற்று நமது பள்ளிக்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
பல்வேறு போட்டிகளில் வென்று நமது பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ-மாணவிகளையும் விளையாட்டு ஆசிரியர்களையும் நமது மரியாதைக்குரிய தலைமை ஆசிரியர் திரு V.சந்திரசேகரன் மற்றும் உதவித் தலைமை ஆசிரியர்கள் திரு S. பரமசிவன்,திருV.ரமேஷ், திருமதி B.நிர்மலா ஆகியோர் பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி சிறப்பித்தார்கள்.
-தலைமை ஆசிரியர்,