*தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி,* *பெரம்பலூர்- 621212. *
கடந்த 23/10/2025 அன்று நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்-2019-ன் சிறப்பு அம்சங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாள் புத்தாக்க பயிற்சி வழங்கப்பட்டது. அதில் நமது பள்ளி சார்பாக நுகர்வோர் கழக பொறுப்பாளர் திரு பி. உலகநாதன் பட்டதாரி ஆசிரியர் அவர்களின் தலைமையில், பத்து மாணவ-மாணவிகள் பங்கு கொண்டு,பயிற்சி பெற்று, நமது பள்ளிக்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
அவர்களை 27/10/2025 (திங்கட்கிழமை)காலை இறைவழிபாட்டுக் கூட்டத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்களும், உதவித் தலைமை ஆசிரியர்களும் பாராட்டி சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்கள்.
-தலைமை ஆசிரியர்,
தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர்-621212.