*தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி,* *பெரம்பலூர்-621212.*
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவில் இன்று 07/10/2025 செவ்வாய்க்கிழமை தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் நமது தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயிலும்
R.பிரஜினா(12-A1) அவர்கள் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்று, மாவட்டத்திற்கும், நமது பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார். இவருக்கு தமிழக அரசால் பாராட்டு சான்றிதழும்,ரூபாய் 3,000/- காசோலையும் பரிசாக வழங்கி தமிழ் வளர்ச்சித் துறை சிறப்பித்துள்ளது.
வெற்றி பெற்று மாவட்டத்திற்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்த செல்வி R.பிரஜினா என்ற மாணவியை,பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு V.சந்திரசேகரன், உதவித் தலைமை ஆசிரியர்கள் திருS.பரமசிவன்,திரு R.ரமேஷ்,திருமதி
B.நிர்மலா ஆகியோர் பாராட்டி, சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி சிறப்பித்தனர்.மேலும்,
பயிற்சி அளித்த தமிழாசிரியர்களுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் தலைமை ஆசிரியர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.-தலைமைஆசிரியர்,
தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர்-621212.