பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளியில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு, பாரம்பரிய உணவுத் திருவிழா தலைமை ஆசிரியர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டு, தமிழகத்தின் பாரம்பரிய சுவைகளை தங்கள் கைகளால் தயாரித்து காட்சிப்படுத்தினர். பொங்கல், கம்பங்குழம்பு, கேழ்வரகு அடை, வரகு உப்புமா, குதிரைவாலி பாயசம், திணை லட்டு, எள்ளுருண்டை உள்ளிட்ட பல ஊட்டச்சத்து நிறைந்த பாரம்பரிய உணவுகள் மாணவிகளால் தயாரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டன.
ஒவ்வொரு உணவிற்கும் தனித்தனியான விளக்கங்கள், அவற்றின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் வீட்டிலேயே எளிதில் தயாரிக்க முடியும் முறைகள் பற்றிய விவரங்களும் மாணவிகள் திறம்பட விளக்கினர்.
பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டு உணவுகளை ருசித்து பாராட்டி மகிழ்ந்தனர். நிகழ்ச்சியினை உதவி தலைமை ஆசிரியர்கள் பரமசிவன், ரமேஷ், நிர்மலா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
