தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி
பெரம்பலூர் - 621212

Email : officeadmin@roeverschool.edu.in
Phone : 04328-277218
 
You are Here HOME / Academics / Rules & Regulation
 
Rules and Regulation

THANTHAI HANS ROEVER HR.SEC.SCHOOL

PERAMBALUR

மாணவ மாணவிகள் பின்பற்ற வேண்டியவை

 1. காலையில் இறைவனை தொழுதல்
 2. பெற்றோர், மூத்தோர்களிடம் ஆசிபெற்று வருதல்
 3. பெரியோர்களிடம் மரியாதையாக நடத்தல்
 4. குறித்த நேரத்தில் முன் வருதல்
 5. ஆசிரியர்களுக்கு வணக்கம் தெரிவித்தல்
 6. வகுப்பறையில் ஒழுங்கை கடைபிடித்தல்
 7. வகுப்பறையில் அமைதி காத்தல்
 8. வகுப்பறையை தூய்மையாக வைத்திருத்தல்
 9. வகுப்பறையில் பாடங்களை கவனித்தல்
 10. வகுப்பறையில் உள்ள பொருட்களை பாதுகாத்தல்
 11. ஆசிரியர்கள் குறிப்பிடும் பாடங்களை படித்து வருதல்
 12. ஆசிரியர் கூறும் வீட்டுப் பணிகளை செவ்வனே செய்து வருதல்
 13. விளையாட்டு பாட வேலையைத் தவிர மற்ற நேரங்களில் விளையாடாமலிருத்தல்
 14. ஐயப்பாட்டுள்ள மாணவர்களுக்கு தெரிந்த மாணவர்கள் உதவுதல்
 15. வீட்டில் பெற்றோருக்கு உதவுதல்
 16. பிறர் பொருட்கள் மீது ஆசை வைகாதிருத்தல்
 17. தினந்தோறும் எழுதி, எழுதி பழகுதல்
 18. சகமாணவர்களிடம் அன்பாயிருத்தல்
 19. பொய் பேசாதிருத்தல், திருடாதிருத்தல்
 20. தேர்வு நேரத்தில் பிறரை பார்த்து எழுதாதிருத்தல்
 21. கடினமாக, கவனமாக உழைத்தல்
 22. இடைவேளை பிரிவு தவிர வகுப்பறையில் இருத்தல்
 23. வகுப்பறையை விட்டு வெளியே வரும்போது வரிசையாக செல்லுதல்
 24. வகுப்பறையில் தின்பண்டங்களை உண்ணாதிருத்தல்
 25. வகுப்பறையில் பாடவேளை முடிந்ததும் பேசாதிருத்தல்
 26. காலை மாலை வகுப்புகள் முடிந்ததும் சப்தம் செயாமலிருத்தல்
 27. வகுப்பறை பொருட்கள் சேதமடையாமல் பாதுகாத்தல்
 28. பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருத்தல்
 29. பள்ளியில் இயங்கும் கழகங்கள், இயக்கங்களில் பங்கு பெறுதல்
 30. பள்ளியின் சீருடையை தினந்தோறும் அணிந்து வருதல்
 31. மாணவர்கள் இறைவழிபாடு நடைபெறும் போது அமைதி காத்தல்

அன்பார்ந்த பெற்றோர்களுக்கு அறிவிப்பு

 1. பள்ளி முதல்வரிடம் முன் அனுமதிப் பெற்றே மாணவர்கள் விடுப்பு எடுக்க வேண்டும்
 2. மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு காலை 9:30 மணிக்குள் வரவேண்டும்.
 3. பள்ளி நுழைவு வாயில் (Gate) மூடப்படும் நேரம் காலை 9:30 மணி, மீண்டும் திறக்கப்படும் நேரம் மாலை 4:30 மணி.
 4. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வகுப்பு ஆசிரியர் அல்லது முதல்வரை சந்திக்க அனைத்து வேலை நாட்களிலும் மாலை 4:30 மணிக்கு மேல் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஏதேனும் அவசியம் எனில் தலைமை ஆசிரியர் அல்லது வகுப்பு ஆசிரியரிடம் அனுமதி பெற்று மாணவர்களை சந்திக்கலாம்.
 5. விடுதிமாணவர்கள் விடுமுறைக்குச் சென்று மீண்டும் விடுதிக்கு திரும்பி வரும்போது,பள்ளி திறக்கும் முதல் நாள் மாலை 5:30 மணிக்குள் அவசியம் வரவேண்டும்.
   
 
 
Copyright © Roever Group of Insitutions, Perambalur Powered by AGASOFT